Close
மார்ச் 4, 2025 11:34 காலை

சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் பள்ளியில் ஆண்டு விழா

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் பவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் விளையாட்டு தின விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது

பள்ளியில் 21 ஆம் ஆண்டு விளையாட்டு விழாவை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒலிம்பிக் சுடர் ஏற்றி மாணவர்கள் வருகை நிகழ்ச்சி நடைபெற்றது

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் கொடியேற்றி கொடி வணக்கம் செலுத்தப்பட்டது மாணவ மாணவியர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் பெற்றோர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது

நிகழ்ச்சியில் ஆசிரியை செல்வி வரவேற்புரை ஆற்றினார், ஆசிரியை ஜெயஸ்ரீ சோழவந்தான் முன்னாள் சேர்மன் எம்.கே முருகேசன், முத்துராமலிங்கம் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்

ஆசிரியர் ரம்யா நன்றி கூறினார். தொடர்ந்து ஆண்டு விழா தொடங்கி நடைபெற்றது.

ஆண்டு விழாவில் பள்ளி முதல்வர் ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். மதுரை செந்தூர் பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். வழக்கறிஞர் கணேசன் பரிசுகளை வழங்கினார். ஆசிரியர் பிரியா ஆண்டறிக்கை வாசிக்க மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியை நாகஜோதி நன்றி கூறினார்.

விழாவில் முள்ளிப் பள்ளம் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து பெற்றோர்கள் மாணவ மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top