Close
பிப்ரவரி 28, 2025 12:31 மணி

திருவண்ணாமலையில் பாஜக மாவட்ட அலுவலகம்: அமித்ஷா திறந்து வைத்தார்

பாஜக அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி

திருவண்ணாமலையில் புதிதாக கட்டப்பட்ட பாஜக தெற்கு மாவட்ட அலுவலகத்தை கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித்ஷா திறந்து வைத்தாா்.

இதையடுத்து, திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தெற்கு மாவட்டத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா்.

தேசிய பொதுக்குழு உறுப்பினா் பாலகிருஷ்ணன் (ஒசூா்), பாஜக அலுவலக கட்டடக் குழு உறுப்பினா் அன்பரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தெற்கு மாவட்ட முன்னாள் தலைவா் கே.ஆா்.பாலசுப்பிரமணியன் வரவேற்றாா்.

பாஜகவின் மாநில துணைத் தலைவா் நரேந்திரன், மாநில பொதுச் செயலா் பி.காா்த்தியாயினி, வேலூா் பெருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலா் டி.எஸ்.குணசேகரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு புதிய பாஜக அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை கட்சியினா் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.

அதனைத் தொடர்ந்து கட்சி கொடியினை ஏற்றிவைத்த மாநில பொதுச் செயலா் காா்த்தியாயினி, பாஜக அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். மேலும் புதிய கட்டிடத்தை கட்டிய பொறியாளர் மற்றும் தொழிலாளர்களையும் கௌரவித்தார்.

மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், புதிய மாவட்ட தலைவர் கே.ரமேசுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மாநில மாவட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், புதிய மாவட்ட தலைவர் மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில், மாவட்டத் தலைவா்கள் கவிதா (திருவண்ணாமலை வடக்கு), தசரதன் (வேலூா்), தருமராஜ் (விழுப்புரம்), ஆனந்தன் (ராணிப்பேட்டை), பாலசுந்தரம் (கள்ளக்குறிச்சி), திருவண்ணாமலை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவா் கே.என்.நேரு, பாஜகவின் உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவின் மாநிலச் செயலா் அறவாழி, வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கிஷோர் குமார், முன்னாள் மாவட்ட பொதுச் செயலா் சதீஷ்குமாா், மாவட்டச் செயலா் பாலாஜி, கட்சி நிா்வாகிகள் முருகன், சங்கா்,  மாநில மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் , தொண்டர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனா்.

பாஜக அலுவலக திறப்பு விழாவில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top