Close
ஏப்ரல் 16, 2025 9:11 காலை

சாலவாக்கத்தில் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்த நாள்: முதல்வர் உருவம் பதித்த 72 கிலோ கேக் வெட்டி திமுகவினர் கோலாகல கொண்டாட்டம்..

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு , சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் தலைமையில் 72 மூத்த திமுக நிர்வாகிகளுக்கு மணி விழா மற்றும் முதல்வர் உருவம் பதித்த 72 கிலோ கேக் வெட்டி சாலவாக்கத்தில் திமுகவினர் கோலாகல கொண்டாட்டம்..

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் ஊராட்சியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்த நாள் வரும் மார்ச் 1ம் தேதி வரவுள்ளது.

பிறந்த நாளை முன்னிட்டு 72 கிலோ கேக் வெட்டி கொண்டாடுதல் மற்றும் 72 மூத்த நிர்வாகிகளுக்கான மணி விழா நிகழ்ச்சி சாலவாக்கம் திமுக ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

சாலவாக்கம் ஒன்றியத்தை சேர்ந்த 72 மூத்த திமுக நிர்வாகிகளுக்கு புத்தாடைகள், புடவை வழங்கப்பட்டு, தங்கள்‌ மனைவியுடன் மாலை , கேக் சீர்வரிசையாக ஸ்ரீ சொக்கமன் திருக்கோயிலில் இருந்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக விழா மேடைக்கு வந்து மணிவிழா மாலை மாற்றிக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான சுந்தர் பங்கேற்று, பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட 72 கிலோ கேக் வெட்டி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சாலவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சத்யாசக்திவேல், மாவட்ட கவுன்சிலர் சிவராமன், ஒன்றிய கவுன்சிலர் சேகர், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top