தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் தொம்பரம்பேடு கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வனிதா தேவி தலைமை தாங்கினார் . தலைமை செயற்குழு உறுப்பினர் மூர்த்தி , பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.வி. லோகேஷ், துணை அமைப்பாளர் சங்கர், ஒன்றிய செயலாளர் ஜான் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரியபாளையம் வட்டார அரசு மருத்துவர் சங்கீதா வரவேற்றார்.
இதில் எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளை சேர்ந்த 100 கர்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு செய்யப்பட்டது. இவர்களுக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜன் மலர் மாலை அணிவித்து புடவை, மஞ்சள் , குங்குமம், வளையல், தாலிகயிறு, ஜாக்கெட் ஆகிய சீர்வரிசைகள் வழங்கினார் .
பின்னர் அனைவருக்கும் தயிர் சாதம், புளி சாதம், கருவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் என 5 வகை சாதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலம் , வக்கீல் சீனிவாசன், மகளிர் தொண்டரணியை சேர்ந்த ஜெயலலிதா சசிதரன், தண்டலம் ரவி, சண்முகம் , அப்புன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.