Close
பிப்ரவரி 28, 2025 3:31 மணி

அண்ணாமலையார் கோவிலில் திரை பிரபலங்கள் சுவாமி தரிசனம்

சாமி தரிசனம்செய்த நடிகை ஆண்ட்ரியா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் ரமண மகரிஷி ஆசிரமங்களுக்கு  சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .

வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது அதேபோல், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் திரைப்பட நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம் செய்தார். முன்னதாக ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் ரமண மகரிஷி ஆசிரமம் தரிசனம் மேற்கொண்ட அவர், அதனைத் தொடர்ந்து அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் சன்னதியில்  உள்ள சம்பந்த விநாயகரை வணங்கி தொடர்ந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார்.

சாமி தரிசனம் முடித்து வெளியே வந்த ஆண்ட்ரியாவை பொது மக்கள் ஆர்வத்துடன் அவருடன் பார்த்து செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர். பின்னர் திருக்கோயில் சார்பாக மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.

இசையமைப்பாளர் அனிருத்

அண்ணாமலையார் திருக்கோவிலில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் கண்களை மூடி மனமுருக சாமி தரிசனம் செய்தார்.

மகா சிவராத்திரி உருவான தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சிவராத்திரி தினத்தை ஒட்டி பிரபல இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

முன்னதாக சம்மந்த விநாயகரை வணங்கி தொடர்ந்து  அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார். இசையமைப்பாளர் அனிருத்தை பார்த்த பக்தர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரோடு நின்று செல்பி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினர்.

பின்னர் திருக்கோயில் சார்பாக மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் கிரிவலம் சென்றார்.

இசையமைப்பாளர் அனிருத்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top