தமிழ்நாடு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல்துறை பிரிவு சார்பில், சாதி மத வேறுபாடின்றி செயல்பட வேண்டும் எனும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர், எஸ் பி இணைந்து துவக்கி வைத்தனர்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகிற்கு சமத்துவத்தை போதித்த முன்னோடி மரப்பின் மைந்தர்களாகிய நாம் அனைவரும் சாதி மத வேதமுற்று சகோதர மனப்பான்மை மற்றும் நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டிய தருணம் தற்போது நிலவுகிறது.
இதை விழிப்புணர்வாக கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாடு காவல்துறையில் சமூக நீதி மற்றும் உரிமைகள் பிரிவு சார்பில் இன்று காஞ்சிபுரத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கத்தில் இருந்து தொடங்கியது.
விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் எஸ் பி சண்முகம் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.
இப்பேரணி காவலன் கேட், கரிக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு , மேட்டு தெரு வள்ளல் பச்சையப்பன் தெரு வழியாக பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நிறைவு பெற்றது.
இதில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள் சமத்துவம் தழைக்க ஜாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு அழைவோம் மனித குலம் சிறக்க தீண்டாமை வேண்டாம் சமூக நீதியை காக்க தீண்டாமையை நீக்கு உள்ளிட்ட பதாகைகளை, வன் கொடுமைகளை தடுத்திடுவோம் எனும் பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டபடியே வீதிகளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியினை தமிழ்நாடு காவல்துறை சமூக நீதி மற்றும் உரிமைகள் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.