தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாள் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தமிழக முழுவதும் அதிமுகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு, பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ஆலயத்தில் அதிமுக கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன் ஏற்பாட்டில் பேரில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் தங்கத்தேர் உலா வைபவம் நிகழ்வு நடைபெற்றது
இதில் கழக அமைப்பு செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா, மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் ஆகியோர் திருக்கோயிலில் சிறப்பு அர்ச்சனைகள் மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து காஞ்சி காமாட்சி அம்மன் அடர் நீல நிற பட்டுடுத்தி பலவகை வண்ண மலர்கள் சூடி லஷ்மி, சரஸ்வதி தேவியுடன் தங்க தேரில் எழுந்திருள சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது.
அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஜெயலலிதா புகழ் ஓங்குக , அதிமுக வாழ்க என முழுக்கமிட்டவாறே அம்மனை வழிபட்டனர். திருக்கோயில் வளாகம் முழுவதும் தேரினை வடம் பிடித்து அதிமுகவினர் இழுத்துவர பட்டாசுகள் வெடிக்க திருத்தேர் வலம் வந்தது.
இதனையடுத்து பொதுமக்களுக்கு புளியோதரை , பொங்கல் கேசரி என அன்னதானம் வழங்கினார் .
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட , நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் , மகளிர் அணியினர் என பலர் ஏராளமான கலந்து கொண்டனர்.