கீழக்குறிச்சியில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் நெல் செயல்விளக்க இடு பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கிய தஞ்சை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சாருமதி.
தமிழ்நாடு நீர் வள நிலவள திட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் நாலாம் கட்ட நிலையில்
கீழக்குறிச்சி, ஆவிக்கோட்டை, நெம்மேலி, பாவாஜி கோட்டை மற்றும் ஒலயகுன்னம் கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திட்டத்தின் கீழ் நெல் மற்றும் உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உரத்துடன் இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மதுக்கூர் வட்டாரத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்ட பணிகளை ஆய்வு செய்யவும் பயிற்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு தஞ்சை மாவட்ட, மாநிலத் திட்ட வேளாண்மை துணை இயக்குனர் சாருமதி கலந்து கொண்டார்.
கீழக்குறிச்சி வேளாண் விரிவாக்கம் மையத்தில் இடுபொருட்களை ஆய்வு செய்தபின் முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்த விவசாயிகளுக்கு மானியத்தில் பசுந்தாளுரவிதைகள்,நெல் விதை உளுந்து விதைகள் அசாடிரக்டின் மருந்து சூடோமோனஸ் உயிர் உரங்கள் இதனுடன் ஒரு எக்டருக்கு வேளாண் பல்கலைக்கழகப் பரிந்துரைப்படி நெல்பயிருக்கு தேவையான யூரியா சூப்பர் மற்றும் பொட்டாஷ்உரங்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கினார்.
திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு விதை முதல் விதை வரை தேவையான அனைத்து இடுபொருட்களும் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நெல் மற்றும் உளுந்து பயிரில் மட்டும் செயல் விளக்கம் மேற்கொள்ளப்பட்டு இடுபொருட்கள் 50% மாநிலத்தில் வழங்கப்பட்டு வருவதால் விவசாயிகள் கீழக்குறிச்சி வேளாண் உதவி அலுவலரை அணுகி பதிவு செய்து பயனடைய கேட்டுக்கொண்டார்.
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அனைத்து இடு பொருட்களும் வழங்கப்பட்டு விடுவதால். இடு பொருள் செலவினம் பெருமளவில் குறைவதோடு மண்வளமும் அதிகரிக்கிறது மகசூல் கூறுகிறது விவசாயிகளின் இலாபம் கூடுகிறது.
எனவே தேர்வு செய்யப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் இரண்டரை ஏக்கருக்கான அடங்கலுடன் ஆதார் நகலுடனும் பதிவு செய்து பயனடைய வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீழக் குறிச்சி வேளாண்மை உதவி அலுவலர் முருகேஷ் செய்திருந்தார்.