Close
மார்ச் 3, 2025 10:29 மணி

அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா..!

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன்

திருவண்ணாமலையில் போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதையொட்டி 300 மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர். கமலக்கண்ணன் வழங்கினார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே . பழனிச்சாமி ஆணைக்கிணங்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன்

அதன்படி திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலையில் உள்ள டெரி டெ ஸ்ஹோம் டிரஸ்ட் வளாகத்தில் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அண்ணா தொழிற்சங்கம் திருவண்ணாமலை மண்டலம் சார்பில் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா மண்டல செயலாளர் மனோகரன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

விழாக்கு  மாநகர செயலாளர் ஜெ.செல்வம், மண்டல தலைவர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகிக்க மண்டல பொருளாளர் கணபதி அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர். கமலக்கண்ணன் முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாவட்ட செயலாளருமான எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு 300 மாணவ மாணவிகளுக்கு நோட்டுபுத்தகம், பேனா, புத்தகப்பை, உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு அ னை வருக்கும் அன்னதானமும் வழங்கினர்.

இந்த விழாவில் மண்டல துணை செயலாளர்கள் ரவி ,ஜானகிராமன் மூர்த்தி, முதுநிலை கண்காணி ப்பாளர் விஜயபாஸ்கரன், ஒன்றிய செயலாளர் சரவணன் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் உஷாநாதன், 25வது வார்டு முன்னாள் நகரமன்ற உறுப்பினரும் வட்ட செயலாளருமான திருப்பதி பாலாஜி (எ) வி.வெங்கடேசன் மற்றும் அதிமுக மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் பணிமனைகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணையின்படி திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அலுவலகத்தில்பூத் கிளை அமைப்பது குறித்தும், இளைஞர் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்ப்பது குறித்தும், இளம் தலைமுறையினர் விளையாட்டு வீரர் அணி உறுப்பினர் சேர்ப்பது குறித்தும், வாக்காளர் பட்டியலில் புதிய உறுப்பினர் சேர்ப்பது மற்றும் நீக்குவது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் கணேசன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பெருமாள் நகர் ராஜன் நகர செயலாளர் செல்வம், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், நகரச் செயலாளர், பேரூராட்சி செயலாளர்கள், முன்னாள் மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு அமைப்பு நிர்வாகிகள், கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top