Close
ஏப்ரல் 19, 2025 8:23 மணி

காஞ்சி யதோக்தகாரி பெருமாள் கோவில் தெப்போற்சவம்

கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில், ஒன்றான காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பகுளம், இக்கோவில் அருகில் உள்ளது. இக்குளத்தில் பொய்கை ஆழ்வார் அவதரித்தததால், பொய்கை ஆழ்வார் குளம் என அழைக்கப்படுகிறது.

ஆழ்வார்கள் 12 பேரில் முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வார் அவரித்த இந்த திருக்குளத்தில் 5,000 ஆண்டுகளுக்குப் பின் தெப்போற்சவம் நடந்தது.

முதல் நாள் தெப்போற்சவமான நேற்று மாலை திருக்கோயிலில் இருந்து புறப்பட்ட எம்பெருமான் குளக்கரையினை சுற்றி வந்து திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் யதோக்தகாரி பெருமாளும், பொய்கையாழ்வாரும் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, 5 சுற்று வலம் வந்தனர்.

பக்தர்களின் பாதுகாப்புக்காக போலீசாரும், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சங்கர் தலைமையில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்களும் குளத்தை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று  மாலை இரண்டாவது நாளாக நடைபெற்று தெப்போற்சவம் நிறைவு பெறுகிறது.

தெப்போற்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top