Close
மார்ச் 3, 2025 8:24 மணி

தடா அருகே உள்ள சேனிகுண்டாவில் வசித்து வரும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், தடா அருகே உள்ள சேனிகுண்டாவில் வசித்து வரும் பொது மக்களுக்கு மதிய அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மதியம் சிறப்பாக நடைபெற்றது.

ஆந்திர மாநிலம், தடா பகுதியில் பிரசித்தி பெற்ற எல்லை மாரி துலுக்கானத்தம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலின் சார்பில் இந்திய குடிமக்கள் சமூகநல அறக்கட்டளை ஒன்று இயங்கி வருகிறது.

இந்த அறக்கட்டளையின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்குதல். பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு கல்வி வளர்ச்சிக்கு உதவி செய்தல், ஏழை எளிய வறுமையில் வாடும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் மற்றும் மாணவர்களுக்கு தேவையான பேனா, பென்சில், நோட்டு-புத்தகம் வழங்குதல் என்பது உள்ளிட்ட பல்வேறு சமூக நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தடா அருகே உள்ள சேனிகுண்டா பகுதியில் வசித்துவரும் சுமார் 500 பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு இங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது.

இதன் பின்னர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் நளினிமாயா தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் தேசிய செயலாளர் பிரியா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், ராஜகோபால்சுவாமி, கார்த்திக்ரெட்டி, துணைச்செயலாளர் தேவராஜ், இணைத்தலைவர் குமரன், வில்வமணிரெட்டி, இணைச்செயலாளர் பாஸ்கர்ரெட்டி, வழக்கறிஞர் கரீம், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் நாராயணமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் ராஜா, எம்.எல்.புஷ்பவல்லி, பானு ஜெயச்சந்திரன், கௌரி, வெண்மதி, விஜயலட்சுமி செங்கையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்திய குடிமக்கள் சமூகநல அறக்கட்டளையின் சார்பில் நளினிமாயா தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top