Close
மார்ச் 3, 2025 10:40 மணி

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மொத்தம் 17,983 மாணவர்கள் எழுதினர் :178 பேர் ஆப்செண்ட்..!

நாமக்கல் அருகே கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற, பிளஸ் 2 பொதுத்தேர்வு மையத்தை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் சிஇஓ மாதேஸ்வரி.

நாமக்கல் :

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்கியது. தேர்வில்,198 பள்ளிகளைச் சேர்ந்த, 17,983 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 178 பேர் கலந்து கொள்ளவில்லை.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரை நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்கியது. மாவட்டத்தில் உள்ள 95 அரசுப்பள்ளிகளில் 4,598 மாணவர்கள், 5,170 மாணவியர்கள் என 9,768 பேர், 7 அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 176 மாணவர்கள், 411 மாணவியர்கள் என 587 பேர்,

4 பகுதி அளவு அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 463 மாணவர்கள், 388 மாணவியர்கள் என 851 பேர், 92 தனியார் பள்ளிகளில் 3,920 மாணவர்கள், 3,335 மாணவியர் 7,255 பேர் என ஆக மொத்தம் 198 பள்ளிகளில் 9,157 மாணவர்கள், 9,304 மாணவியர் என மொத்தம் 18,461 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து ஹால் டிக்கட் பெற்றிருந்தனர். இவர்களில் 17,983 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 178 பேர் கலந்து கொள்ளவில்லை.

மேல்நிலைப் பொதுத்தேர்வுக்கு 86 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 86 துறை அலுவலர்கள், 4 கூடுதல் துறை அலுவலர்கள், 200 பறக்கும்படை உறுப்பினர்கள், 24 வழித்தட அலுவலர்கள், 3 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 1,260 அறைக்கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கலெக்டர் ஆய்வு:

நாமக்கல் மாவட்டம், செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் போதுப்பட்டி கீரின் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு மையத்தை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், தேர்வு மையங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், உதவியாளர்கள் மூலம் தேர்வு எழுதுவதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிஇஓ மகேஸ்வரி ஆய்வில் கலந்துகொண்டார்.

மொழிப்பாடம்:

நேற்று பிளஸ் 2 மொழிப்பாடம் தேர்வு நடைபெற்றது. மொத்த மாணவ மாணவியர் 18,461 பேரில், தமிழ் பாடத்தை 18,415 மாணவ மாணவிகளும், பிரஞ்சு மொழிப்பாடத்தை 42 மாணவ மாணவிகளும், சமஸ்கிருத மொழிப்பாடத்தை 4 பேரும் தேர்வு செய்து பொதுத் தேர்வு எழுதினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top