Close
மார்ச் 7, 2025 2:46 காலை

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கூட்டத்தில் பேசிய விவசாயிகள்

திருவண்ணாமலையில் நடைபெற்ற வட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் நாயுடு மங்கலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை உடனடியாக திறந்திட வேண்டும் என விவசாயி வலியுறுத்தி பேசினார்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்டரங்கில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு துணை ஆட்சியர் (தேர்தல்) குமரன் தலைமை தாங்கினார். தாசில்தார் துரைராஜ் வட்ட வழங்கல் அலுவலர் தியாகராஜன் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பரிமளா துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) கோபு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்க துரிஞ்சாபுரம்வேளாண்துறை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் அலுவலக மேலாளர் (நிர்வாகம்) பழனி மற்றும் தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் கிருஷ்ணன் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கார்கோணம் சந்திரசேகரன் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஒன்றிய செயலாளர் துரை விவசாய சங்க பிரதிநிதி வெள்ளைக்கண்ணு உள்பட விவசாய சங்க பிரதிநிதிகள் அனைத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், சமீபத்தில் பெஞ்சல் புயல்மழையால் விவசாய விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன. சேதமடைந்த பயிர்களுக்கு 4 மாதங்கள் ஆகியும் விவசாயிகளுக்கான உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சட்டமன்ற அறிவிப்பின்படி கோவூரில் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும். நாயுடுமங்கலத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை உடனடியாக திறந்திட வேண்டும். திருவண்ணாமலை பகுதியில் தனியார் உரவிற்பனை நிலையத்தில் விவசாயிகளுக்கு உரங்கள் விற்பனை செய்வதைவிட கூட்டுறவு கடைகளில் உரங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்றனர்.

இதேபோல பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கமலப்புத்தூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கலசப்பாக்கம்: விவசாயிகள் குறைதீர்வு நாள்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்ப்பள்ளிப் பட்டு வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் மா. வடிவேல் தலைமையில் நடைப்பெற்றது. உடன் வட்ட வழங்கல் அலுவலர் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாமலை, வேளாண்மை அதிகாரி பழனி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top