Close
மார்ச் 6, 2025 11:28 மணி

கலைஞர் விளையாட்டு உபகரண பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ சரவணன்

விளையாட்டு உபகரண பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ சரவணன்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் விளையாட்டு உபகரண பொருட்கள் 45 ஊராட்சிகளிலும் உள்ள இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கும் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காகவும் 33 வகையான பொருட்கள் உள்ளடக்கிய விளையாட்டு உபகரண பொருட்களை கலசபாக்கம் எம்எல்ஏ சரவணன் வழங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியம், தலைமை தாங்கினார். மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவகுமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், மண்டல முதுநிலை மேலாளர் நேயோலின் ஜான், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாமலை, அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சரவணன் எம்எல்ஏ கலைஞரின் விளையாட்டு உபகரண பொருட்களை வழங்கி பேசியதாவது,

கிராமங்களில் உள்ள இளைஞர்களின் திறமைகளை வெளியில் கொண்டு வருவதற்கும் அதேபோல் இளைஞர்கள் அனைவரும் விளையாட்டில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்பதற்காகவும் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சிகளில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் 11 வகையான விளையாட்டு உபகரண பொருட்கள் 33 பொருட்களை சுமார் ரூ 27.75 லட்சத்தில் தமிழக அரசு மாணவர்களுக்காக மட்டைப்பந்து, வாலிபால், கூடைப்பந்து, சதுரங்க விளையாட்டு, கேரம்போர்டு, டென்னிஸ், ஹாக்கி, சிலம்பம், கபடி உபகரண பொருட்கள், டி ஷர்ட், தம்பல்ஸ், போன்ற பல்வேறு வகையான விளையாட்டு உபகரண பொருட்கள் வழங்கியுள்ளது.

மேலும் மாணவர்கள் படிப்பிலும் சரி விளையாட்டிலும் சரி சிறந்த முறையில் விளையாடி சாதிக்க வேண்டும் , விளையாட்டில் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் தாலுகா அளவிலும் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் நடைபெறுகின்ற போட்டிகளில் வெற்றி பெற்று சாதிக்க வேண்டும் என்று சரவணன் எம்எல்ஏ தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, கலசப்பாக்கம் ஒன்றிய திமுக செயலாளர்கள் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top