Close
ஏப்ரல் 24, 2025 6:50 மணி

பிளஸ் 1 பொது தேர்வு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 56 மையங்களில் நடைபெறுகிறது

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.

இதற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவித்து அதற்கான பணிகளை துவக்கியது.

அவ்வகையில் கடந்த 3ம் தேதி மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு பிளஸ் டூ துவங்கி வரும் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து பிளஸ்1 அரசு பொது தேர்வு இன்று தொடங்கி வரும் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இத்தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வுகளை 108 பள்ளிகளை சேர்ந்த 6,863 மாணவர்களும் மற்றும் 7515 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 378 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

மாணவர்கள் தேர்வு எழுதற்காக 56 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டும், 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்வுகளை முறையாக நடத்திடவும் மாணவர்களின் தவறுகளை தடுத்திடும் வகையில் 80 பேர் கொண்ட பறக்கும்படை குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி தெரிவித்துள்ளார்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குடிநீர், கழிவறை மற்றும் தடையில்லா மின்சாரம் உள்ளிட்டவைகளில் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top