கோவையில் நடைபெற்ற 6வது தேசிய சிலம்பப் போட்டியில் காஞ்சிபுரம் மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்றதை ஒட்டி காஞ்சியில் அவர்களுக்கு பட்டாசுகள் வெடித்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது..
இந்திய சிலம்ப கழகம் சார்பில் கோவையில் உள்ள வெள்ளை கிணறு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆறாவது தேசிய சிலம்பப் போட்டி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு ஆந்திரா கேரளா தெலுங்கானா மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இராண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நான்கு வயது முதல் கல்லூரி மாணவர்கள் வரை பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில் காஞ்சிபுரம் ஸ்கேட்டிங் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் பாபு தலைமையில் 47 வீரர்கள் பல்வேறு போட்டி பிரிவுகளின் கீழ் பங்கேற்றனர்.
இதில் 20 தங்கம். 36 வெள்ளி 28 வெண்கலம் என பல பரிசுகளை ஒட்டுமொத்தமாக வென்று சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பிடித்தனர்.
தேசியப் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளை பாராட்டும் விதமாக காஞ்சி ஸ்கேட்டிங் அகாடமி வளாகத்தில் காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார், திமுக ஒன்றிய செயலாளர் குமார், காஞ்சி ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் சீனிவாசன் ஆகியோர் பதக்கங்களை அணிவித்த போது பட்டாசுகள் வெடித்து வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மேலும் விரைவில் நடைபெற உள்ள அனைத்து போட்டிகளிலும் மிகுந்த ஈடுபாடுடன் கலந்து கொண்டு தமிழகத்திற்கும் காஞ்சிபுரத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்வின் போது அகடமி பயிற்சியாளர்கள் கோகுல்குமார் , ஹரி தர்மா ,யோகேஷ் மற்றும் பெற்றோர்கள் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்தப் பயிற்சி அகடமியின் வீரர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தொடர்ந்து பதக்கங்களை வென்று வருவது குறிப்பிடத்தக்கது.