காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ளது நூற்றாண்டைக் கண்ட ராஜாஜி சந்தை. இந்த சந்தையில் காஞ்சிபுரம் மட்டுமல்லது சுற்றுப்புற கிராமங்களில் இருந்து விளைவிக்கப்பட்ட காய்கறிகள் விற்பனைக்காக வைக்கப்படும்.
போதிய அடிப்படை வசதிகள் இல்லை என கூறி இந்த ராஜாஜி சந்தையை புனரமைக்க வேண்டும் என கோரிக்கை இழந்தது அதன் அடிப்படையில் ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு முதல்வரால் திறக்கப்பட்டது.
அதுவரை தற்காலிகமாக செயல்பட்டு வந்த மிலிட்டரி சாலையில் இருந்து இந்த புதிய ராஜாஜி சந்தைக்கு கடந்த மாதம் இடமாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த புதிய காய்கறி சந்தை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பொது மக்களுக்கு இடையூறாக நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த காய்கறிகளை ஓரமாக வைக்கக் கோரி வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
அங்கு வரும் பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தபோது குடிநீர் வராத நிலையிலும், அங்கு சுத்தமும் இல்லை என கூறி உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் மற்றும் மாநகராட்சி பொறியாளருக்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது ராஜாஜி காய்கறி வியாபாரிகள் சந்தை நிர்வாகிகள், மாநகராட்சி பொறியாளர் என பலர் இருந்தனர்.