Close
மார்ச் 10, 2025 1:32 காலை

பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கையை தொடங்கி வைத்த துணை சபாநாயகர்

மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள சடையனோடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் உத்தரவின்படி மார்ச் 1 முதல் 5 வயது நிரம்பிய குழந்தைகளை 2025- 26 ஆம் கல்வி ஆண்டு கால மாணவர் சேர்க்கை தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் அண்ணாமலை, தமயந்தி ஏழுமலை, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பாரதி ராமஜெயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பொதுக்குழு உறுப்பினர் பாலு அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி பங்கேற்று பள்ளியில் முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசியதாவது,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2025-2026 ஆண்டு மார்ச் 1 முதல் 5 வயது நிரம்பிய குழந்தைகளை முதல் வகுப்பு சேர்க்க வேண்டி அறிவித்திருந்தார். அதன்படி அனைத்து ஊராட்சிகளிலும் 5 வயது நிரம்பிய குழந்தைகளை முதல் வகுப்பு சேர்க்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் கூறினார்.

அதேபோல் மாணவர்களை பள்ளியில் சேர்த்து மாணவர்கள் சிறந்த முறையில் படிக்கிறார்களா இல்லையா என்பதை வீட்டில் உள்ள பெற்றோர்கள் தினமும் கண்காணிக்க வேண்டும். அப்படி கண்காணித்து மாணவர்களுக்கு இன்று என்ன பாடம் சொல்லிக் கொடுத்தார்கள் என்று கேட்டு அந்தப் படத்தை மீண்டும் பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்து குழந்தைகள் நல்ல முறையில் படிப்பதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கோபு, முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் உஷாராணி சதாசிவம், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பிரபாகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சகாதேவன், மாவட்ட பிரதிநிதி மோகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன், மற்றும் இருபால் ஆசிரியர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top