Close
மார்ச் 9, 2025 5:31 மணி

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வில் 404 வழக்குகள் தீர்வு

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வில் 404 வழக்குகள் தீர்வு காணப்பட்டு 10 கோடியே 79 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது..

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்படி காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வு காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி செம்மல் தலைமையில் நடைபெற்றது.

இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, வங்கி வார கடன் வழக்கு, காசோலை வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, குடும்ப நல வழக்கு மற்றும் தொழிலாளர் நல வழக்குகள் என மொத்தம் 871 கையாளப்பட்டது.

இதில் 44 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு மொத்த இழப்பீடாக ரூபாய் 10 கோடியே 79 லட்சத்தி 53 ஆயிரத்து ஐம்பது ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் வங்கி வழக்குகளில் 49 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூபாய் 51 லட்சத்து 33 ஆயிரத்து 300 வழங்க வசூலிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கூடுதல் மாவட்ட நீதிபதி சரவணகுமார், தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதியின் திருமதி சுஜாதா, குற்றவியல் நீதி துறை நடுவர் வசந்தகுமார் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்ற நீதிபதிகள் வழக்கறிஞர்கள் வழக்காடிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top