Close
மார்ச் 9, 2025 5:31 மணி

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் பெண் காவல் புலன் விசாரணை அலுவலருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான குற்றங்களை கையாளும் என் காவல் புலன் விசாரணை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என அறிவித்தார்.

அவ்வகையில் இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் இன்று இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியினை காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் இன்று துவங்கிய இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி ஒரு மூன்று நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் காவல் நிலையங்களில் பணிபுரியும் பெண் காவலர்கள் ஆய்வாளர்கள் ஆகியோர் இப் பயிற்சியில் கலந்து கொள்வார்கள்

நாள் தோறும் 100 பெண் காவலர்களுக்கு இப்பயிற்சியினை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சமூக பாதுகாப்பு அலுவலர், அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்டு புலன் விசாரணை மேற்கொள்வது மற்றும் அதனை எவ்வாறு திறன் பட செய்தல் என்பதை குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிப்பார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top