திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வகித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் உலக மகளிர் தின விழாவின் முன்னிட்டு மாவட்ட தாட்கோ சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வைப்பு தொகை பத்திரங்கள், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பாக பயனாளிகளுக்கு மானிய நிதி உதவிகள், நுண் நிறுவன நிதி கடன் உதவிகள், வங்கி கடன் உதவிகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள், மகளிர் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டி கேடயங்கள் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர் வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் மணி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி புரியும் மகளிர் அலுவலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக முன்பு மகளிர் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு பேரணியை கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெயஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சார்பு நீதிபதி தாவுத் அம்மாள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். மேலும் இந்தப் பேரணி கோட்டை வீதி, பழைய பேருந்து நிலையம், காந்தி சாலை, புதிய பேருந்து நிலையம் வழியாக அரசு மகளிர் பள்ளி அருகே நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஸ்ரீதர் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மூத்த வழக்கறிஞர்கள் ஆசிரியர்கள் நீதிமன்ற அலுவலக அலுவலர்கள் மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சட்டக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா
திருவண்ணாமலை சட்டக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் எஸ்கேபி கல்வி குழுமங்களின் தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் அரங்கசாமி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் சக்தி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மருத்துவர் சந்தானப்பிரியா இன்பநேசன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். பெண்களின் எழுச்சி தற்கால பெண்களின் பாதுகாப்பையும் முன்னேற் த்தையும் உறுதிப்படுத்துவதற்கான வழிவகைகளை பற்றி உரையாடினர்.
விழாவில் எஸ்கேபி சட்டக்கல்லூரி முதல்வர் முனைவர் ரவி தனது உரையில் என்னுடன் என் உரிமை தலைப்பில் பெண்களின் சட்ட பாதுகாப்பு பற்றி உரையாற்றினார். மேலும் பெண் பேராசிரியர்கள் முன்னின்று நடத்தினார்கள். மாணவிகள் பல்வேறு தலைப்புகளில் மகளிர்களின் சாதனைகளை எடுத்து கூறி சிறப்பு உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில் பிஆர்ஓ சையத் ஜஹிருத்தீன் , கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்