Close
மார்ச் 10, 2025 1:51 காலை

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தவெக சார்பில் தூய்மை பணியாளர்கள் கௌரவி

பெரியபாளையத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் தூய்மை பணியாளர்களை கௌரவித்து பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், எல்லாபுரம் ஒன்றிய தமிழக வெற்றி கழகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் கலந்துகொண்டு பேருந்து நிலையத்தில் உள்ள புரட்சியாளர் சட்ட மாமேதை அம்பேத்கர் சிலைக்கு, வீரமங்கை வேலுநாச்சியார் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.

தொடர்ந்து மாவட்ட பொருளாளர் கிருபா, மாவட்ட வழக்கறிஞர் அணியை சேர்ந்த வழக்கறிஞர் ரிஸ்வானா ஏற்பாட்டில் ஊராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்.

பின்னர்பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கும், கடை வியாபாரிகளுக்கும் இனிப்பு வழங்கி, 200 க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கினார்.

இதில் நிர்வாகிகள் கவியரசன், ரீகன், ராஜேஷ், ஆனந்த், ஷயின்ஷா, பார்த்திபன், சுஜித், உள்ளிட்ட திரளான கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top