காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விஷ்வ இந்து பரிஷத் வட தமிழக மாநில மற்றும் மாவட்ட கூட்டத்தில், மதசார்பற்ற அரசு ஒருதலை பட்சமாக ஒரு மதத்தினை மட்டும் ஆதரிக்கும் விதமாக செயல்படுவதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்.
விஷ்வ ஹிந்து பரிஷத் வட தமிழகம் சார்பில் காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் வீனஸ் திருமண மாளிகையில் இரண்டு நாள் மாநில மற்றும் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற இந்த மாநாட்டில் விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மாநில தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் கூறுகையில்,
ஆறு மாதத்துக்கு ஒரு முறை தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் ஓன்று கூடி அப்போதைய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பது வழக்கம்.
வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்து தர்மத்திற்கு எதிராக செயல்படும் இன்று சமய அறநிலைத்துறையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக திருக்கோயில் வளாகங்களில் வாகன நிறுத்தும் கட்டணம் வசூலிக்கும் அரசு மசூதிகளிலோ கிறிஸ்துவ தேவாலயங்களிலோ இதுபோன்று வசூலிப்பதில்லை. சிறப்பு கட்டணம் என்ற பேரில் கொள்ளை அடிக்கும் இந்து சமய அறநிலையத்துறை செயலைக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் மதச்சார்பற்ற அரசு எனக் கூறிக் கொள்ளும் தமிழக அரசு ஒருதலைபட்சமாக ஒரு மாநிலத்தினை மட்டும் மாதிரிக்கும் விதமாகவும் இந்து சமயத்தின் மீது பாரபட்சம் காண்பித்து கண்டித்தும் இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் ரூபாய் 65 கோடி மதிப்பீட்டில் நங்கநல்லூர் பகுதியில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கான தங்கும்படி கட்ட முடிவு செய்து உள்ளது கண்டிக்கத்தக்கது எனவும், அப்பகுதி அதிகம் வசிக்கும் இந்துகள் பகுதி என்பதும் அந்த இடத்தில் இதுபோன்று இஸ்லாமிய விடுதி அமைக்கப்பட்டால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுவதை இந்த அரசு விரும்புகிறதா எனவும் கேள்வி எழுப்பினார்.
இக்கூட்டத்தில் விசுவ இந்து பரிஷத் மாநில செயலாளர் பாலமணிமாறன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சிவானந்தம் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்