Close
மார்ச் 15, 2025 2:25 காலை

முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு குத்துச்சண்டை போட்டி

போட்டியில் வென்ற வீரர்களுக்கு கோப்பையை வழங்கிய திமுக செயலாளர்

திருவண்ணாமலையில் நடைபெற்ற முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாள் குத்துச்சண்டை போட்டியில் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழக முதல்வா் பிறந்த நாளையொட்டி, டாக்டா் எ.வ.வே.கம்பன் பாக்ஸிங் அகாடமி சாா்பில், குத்துச்சண்டைப் போட்டிகள் நடைபெற்றன. தனியாா் பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.

போட்டிகளில் வென்றவா்களுக்கான பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு, பாக்ஸிங் அகாடமியின் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தாா். செயலா் மணிமாறன், பொருளாளா் அன்பரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஸ்ரீசரஸ்வதி விகாஸ் மெட்ரிக் பள்ளித் தாளாளா் ராமச்சந்திரன் வரவேற்றாா்.

திருவண்ணாமலை மாநகர திமுக செயலா் காா்த்திவேல்மாறன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வென்ற வீரா், வீராங்கனைகளுக்குப் பரிசுகள், கோப்பைகள் வழங்கிப் பேசினாா்.

ஓம்சக்தி கன்சல்டிங் உரிமையாளரும் திமுக மாவட்ட பிரதிநிதி குட்டி புகழேந்தி நடுவராக பணியாற்றியவர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் சீருடைகள் வழங்கினார்.    குத்துச்சண்டை போட்டி நடைபெற்ற இடத்தில் வீரர் வீராங்கனைகளுக்கு முதல் உதவி சிகிச்சை முகாமும் ஆம்புலன்ஸ் வாகனமும் திருவண்ணாமலை அருணை மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி சார்பில் மருந்துகள் வழங்கப்பட்டது.

குத்துச்சண்டைபோட்டி நடுவர்கள் பிரபாகரன், பிரேம்குமார், ரெமோ சீனிவாசன் மணிகண்டன் சம்சுதீன் தம்பி ராமையா பாலசந்தர் பரத் ஸ்ரீநிவாசன் ஆகியோர் போட்டியினை நடத்தினார்கள்.

செங்கல்பட்டு எ.பி.கே.சரவணன் 67 புள்ளிகள் எடுத்து முதலிடமும், சென்னை ஜே.எஸ்.பி.ஜெயராமன் 61 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடமும், செங்கல்பட்டு அம்பேத்கா் பாக்ஸிங் கிளப் பிரேம்குமாா் 58 புள்ளிகள் எடுத்து மூன்றாம் இடமும் பிடித்தனா்.

விழாவில், தெற்கு மாவட்ட பிரதிநிதி புகழேந்தி, தொழிலதிபா்கள் சத்தியகணேஷ், காா்த்திகேயன், சுரேஷ், பூா்ணச்சந்திரன், நரசிம்மா, திருவண்ணாமலை மாநகராட்சி உறுப்பினா்கள் மண்டி பிரகாஷ், வழக்குரைஞா் நாகராஜ், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top