காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை சண்முக நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சண்முக கணபதி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது
நகரேஷு காஞ்சி , கல்வியில் கரையில்லா காஞ்சி என பலவாறாக புகழ்பட்டு காஞ்சி மாநகரில் கோரிக்கை ஸ்ரீ சண்முக கணபதி குடியிருப்பு பகுதியில் புதிதாக அருள்மிகு ஸ்ரீ சண்முக கணபதி ஆலயம் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு துவங்கப்பட்டு பல லட்சம் மதிப்பீட்டில் , ஸ்ரீ பால விநாயகர், பால முருகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை , நவகிரகம், நான்கு கால் மண்டபம் , மூலவர் விமானம் என அமைக்கப்பட்டது.
பணிகள் நிறைவுற்ற வேலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி நவகிரக உமமும் தன பூஜை கோ பூஜை என பல நடைபெற்றது. மதியம் 12 மணியளவில் பிம்பங்கள் பிரதிஷ்டை வாஸ்து சாந்தி என தொடங்கி மாலை 6 மணிக்கு முதல் கால யாக பூஜை அஷ்டபந்த சாத்துதல் என நிறைவுற்றது
இதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு இரண்டாம் கால தியாக பூஜை நாடி சந்தானம் என துவங்கி 9 மணி அளவில் மகா பூர்ணஹூதி நிறைவு பெற்றது.
இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மூலவர், விமானம், மூலவர் கணபதி, நவகிரகம் உள்ளிட்ட சந்நிதிகளுக்கான கலச புறப்பாடு மேளதாளத்துடன் திருக்கோயிலை வலம் வந்தது.
இதனைத் தொடர்ந்து மூலவர் விமானத்திற்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தில் நடத்தி வைத்தனர்.
அதன் தொடர்ச்சியாக மூலவர், நவகிரகம் உள்ளிட்ட பல்வேறு சன்னதி புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நிறைவு பெற்றது.
மூலவர் ஸ்ரீ அருள்மிகு சண்முக கணபதிக்கு பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இறை அருள் பெற்றனர்.
மஹா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டது.