சென்னை விநாயகா பல்கலைக்கழகத்தின் சார்பில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 200க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்
இதனை தொடர்ந்து சிறப்பு மருத்துவ முகாம் தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கியது..
சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் சென்னை பிரிவு, காஞ்சிபுரம் ஸ்ரீனி மருத்துவமனை மற்றும் ஏகேஜி கருவுறுதல் மையம் ஆகியவற்றின் சார்பில், உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு சிறுநீரகம் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மருத்துவத்துறை மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை விநாயகா மருத்துவ குழும சிறுநீரக பிரிவு தலைவர் டாக்டர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
பேரணியில் சிறுநீரகம் பாதுகாத்தல், அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் பல்வேறு வீதிகள் வழியாக மாணவ மாணவிகள் தனியார் திருமண மண்டபத்தை அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் பொது மக்களுக்காக நடத்தப்படுகிறது. இதில் சிறுநீரக நோய் பரிசோதனை, பொது மருத்துவம், கண் பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டு சிறப்பு மருத்துவர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
நமது உடலில் முக்கிய பாகங்களில் ஒன்று சிறுநீரகம் எனவும், உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் முக்கிய பணிகளை செய்து வரும் நிலையில் அதனை நாம் பாதுகாக்க வேண்டும், அதே வேளையில் அதனை பரிசோதனையின் மூலம் அவ்வப்போது அதன் செயல்பாடுகள் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த உறுப்பு செயல் இருக்கும் நிலையில் அனைத்து உறுப்புகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதிக கவனம் கொள்ள வேண்டும் என இந்த விழிப்புணர்வு மூலம் பொது மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஏ கே ஜி கரு ஊறுதல் மைய மகப்பேறு மருத்துவ நிபுணர் இன்பவள்ளி, மருத்துவ ஆலோசகர் தமிழரசன், சீனி மருத்துவமனை அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் டாக்டர் சசிகுமார், விநாயகா மிஷன் சென்னை பிரிவு இயக்குனர் முத்துராஜ் பேராசிரியர்கள் பானு, தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.