காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா இன்று காஞ்சிபுரம் செவிலிமேட்டில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி செல்வி தலைமையில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் காந்தி , காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு பொருட்கள் வழங்கி மற்றும் நல் மகப்பேறு கிடைக்க ஆசீர்வாதம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, கர்ப்பிணி பெண்கள் நல்ல ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும் எனவும், அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை முறையாக மேற்கொண்டு நல் முறையில் மக்கட்பேறு பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் சமீப காலங்களில் பிரசவங்கள் யூடியூப் பார்த்து மேற்கொள்ளும் நிலையில் அது தாய் மற்றும் சேயைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் இதுபோன்ற நிலைகளில் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். தற்போது அது போன்ற நிபுணர்கள் யாரும் இல்லை என்பதால் அந்த நிகழ்வினை தவிர்க்க வேண்டும் எனவும் , இதுபோன்ற செயல்கள் சட்டப்படி குற்றம் எனவும் தெரிவித்து நல்ல மகிழ்ச்சியோடு உணவுகளை உட்கொண்டு மகப்பேறு நல்நிலையில் வாழ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த அறிவுரை அனைவராலும் வரவேற்கப்பட்டது.