Close
மார்ச் 15, 2025 3:30 மணி

அணைக்கட்டு புனரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்த துணை சபாநாயகர்

கீழ்பெண்ணாத்தூர் வட்டம் தண்டரை அணைக்கட்டை ரூபாய் 4 கோடியே 40 லட்சத்தில் புனரமைக்கும் பணிகளை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் உள்ள கவுத்தி மலை காட்டில் துரிஞ்சலாறு உற்பத்தியாகி கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மனம் பூண்டி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.
இந்த துரிஞ்சலாற்றின் குறுக்கே கீழ்பெண்ணாத்தூர் வட்டம் தண்டரை கிராமத்தில் தண்டரை அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டின் நீளம் 206 மீட்டர் மற்றும் உயரம் 100 மீட்டர் ஆகும்.
இந்த அணைக்கட்டின் மூலம் மூன்று ஏரிகள் வாயிலாக சுமார் 37124 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அணையின் தடுப்புச் சுவர் மற்றும் அதன் பக்க சுவர்கள் சேதம் அடைந்து உடைந்து உள்ளது.
மேலும் அணையில் இருந்து செல்லும் கால்வாயில் தடுப்பு சுவர் உடைந்து கால்வாய் கரைகள் சேதம் அடைந்துள்ளது.

இந்நிலையில் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, தண்டரை அணைக்கட்டில் மழையினால் சேதமடைந்த அணைக்கட்டை சரி செய்ய இருபுறமும் தடுப்புச் சுவர் அமைத்தும் தரைத்தளங்களை சீர் செய்தும் மண் கரை அமைத்தும் புணரமைத்து மேம்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் ரூபாய் 4 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்து அரசாணை வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து துணை சபாநாயகர் பிச்சாண்டி அணைக்கட்டை புனரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, துணை செயலாளர் விஜயகுமார், பழனி, தண்டரை பாபு, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், அரசு ஒப்பந்த காரர்கள், திமுக ஒன்றிய நிர்வாகிகள் ,நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், ஊராட்சி மன்ற அலுவலக பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top