திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாளை முன்னிட்டும் மகளிர் தினத்தையும் முன்னிட்டு அனைத்து அலுவலர்களுக்கும் சி.என். அண்ணாதுரை, எம்பி, கேக் வெட்டி கொண்டாடி இனிப்புகளையும் வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்பொழுது அவர் பேசுவையில், முத்தமிழறிஞர் கலைஞரும் சரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சரி தமிழக மக்களுக்காக தினம் தோறும் பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் வழங்கினார். அதில் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டம், பெண் பிள்ளைகள் மற்றும் ஆண் பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்கு புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ் தமிழ் புதல்வன் திட்டம் என்ற திட்டத்தில் மாதாமாதம் ரூ 1000 வழங்கி வருகிறார்.

அதேபோல் மாணவர்கள் சிறந்த முறையில் படித்து படிப்பிலும் சரி விளையாட்டிலும் சரி சிறந்த முறையில் விளையாடி ஜெயிக்க வேண்டும் சாதிக்க வேண்டும் என்று அவர்களுக்காக பல்வேறு திட்டங்களும், சலுகைகளும் வழங்கி வருகிறார். அதேபோல் தமிழகம் முழுவதும் வளர்ச்சியான மாநிலமாக மாற்றி வருகிறார். அதற்காக எண்ணற்ற நலத்திட்ட உதவிகளும் பல வளர்ச்சி பணிகளும் தினந்தோறும் செய்து வருகிறார் என கூறினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ராமஜெயம், அண்ணாமலை, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், கோபு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சகாதேவன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் இன்ஜினியர்கள் அருணா, தமிழரசி , பிரசன்னா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன், இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துறை சார்ந்த அனைத்து அலுவலர்கள் மகளிர்கள் அரசு அலுவலர்கள் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.