Close
மார்ச் 17, 2025 11:36 மணி

குவாரிகளில் கனிமங்களை ஏற்றிச் செல்வோா் இ-பெர்மிட் பெற விண்ணப்பிக்கலாம்

மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்

திருவண்ணாமலை மாவட்ட கல் குவாரிகளில் கனிமங்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வோா் இணையவழி அனுமதி (இ-பெர்மிட்) பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளார் .

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

திருவண்ணாமலை, போளூா், ஆரணி, செய்யாறு, செங்கம், சேத்பட், தண்டராம்பட்டு, கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூா், வந்தவாசி, ஜமுனாமரத்தூா், வெம்பாக்கம் உள்ளிட்ட வட்டங்களில் கல் குவாரி மற்றும் கிரானைட் குவாரிகளுக்கு குத்தகை உரிமம் வழங்கப்பட்டு குவாரிகள் இயங்கி வருகிறது.

இந்தக் குவாரிகளில் இருந்து வாகனங்களில் ஏற்றிச்செல்லும் கனிமங்களை கண்காணிக்கவும், அனுமதிக்கப்பட்டுள்ள அளவைவிட கூடுதலாக கனிமங்களை ஏற்றிச் செல்வதை தடுக்கும் வகையில் வழங்கப்படும் நடைச்சீட்டு (பெர்மிட்) இணையதளம் மூலம் வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

வாகனங்களில் ஏற்றிச் செல்லும் கனிமங்களை கண்காணிக்க மற்றும் அனுமதிக்கப்பட்டுள்ள அளவிற்கு கூடுதலாக கனிமங்களை ஏற்றி செல்வதை தடுக்கும் வகையில் வாகனங்களுக்கு வழங்கப்படும் நடைசீட்டு முறை இணையதளம் வாயிலாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் குவாரி குத்தகைதாரர்கள்  இணையதளத்தில் சமா்ப்பிக்கும் நடைச்சீட்டு விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்து இ-பெர்மிட் வழங்கப்படுகிறது. இதுதவிர, திருவண்ணாமலை மாவட்ட கல் குவாரி குத்தகைதாரா்களால் இ-பெர்மிட் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  இந்த வசதியை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த கல் குவாரி குத்தகைதாரா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று  தெரிவித்துள்ளார் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top