திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த ஆவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட கொளத்தூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தில் நியாய விலைக் கடை இதுவரை இயங்கி வந்தது.
இந்நிலையில் கட்டிடம் பழுதடைந்ததையடுத்து அங்குள்ள நடுத்திட்டு பகுதியில் ரூ12.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஆவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தனி அலுவலர் செல்வம் தலைமை தாங்கினார்.முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் ஏழுமலை அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நியாய விலைக்கடை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தும், குத்து விளக்கேற்றி முதல்விற்பனையையும் தொடங்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இவ்விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சோமாசிபாடி சிவக்குமார்,வேடநத்தம் குப்புசாமி, நகர செயலாளர் அன்பு, கிளை செயலாளர்கள், ஒன்றிய பிரதிநிதிகள்,நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள்,வட்ட வழங்கல் அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து துரிஞ்சாபுரம் அடுத்த மங்களத்தில் ஸ்ரீ போர் மன்னன் லிங்கேஸ்வரர் 193 ஆம் ஆண்டு தேர் திருவிழாவை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி வடம் பிடித்து தேரை இழுத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் அண்ணா மலை, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர்கள், கோவில் அறங்காவலர்கள், விழா குழுவினர் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.