Close
மார்ச் 18, 2025 1:32 மணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்..!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட பாஜக கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னையில் டாஸ்மாக் ஊழலுக்கு எதிரான பாஜகவின் போராட்டத்துக்குச் சென்ற மாநிலத் தலைவா் அண்ணாமலையை போலீஸாா் கைது செய்தனா். இதைக் கண்டித்தும், ரூ.1,000 கோடி ஊழலைக் கண்டித்தும், அண்ணாமலையை விடுவிக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் பாஜகவினா்  போராட்டங்களில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகர வடக்கு மற்றும் தெற்கு பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை, காமராஜா் சிலை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்ட பாஜகவின் முன்னாள் தலைவா் கே.ஆா்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டப் பொருளாளா் சுரேஷ், நகர பொருளாளா் கங்காதரன் உள்ளிட்ட பலரை போலீஸாா் கைது செய்தனா்.

அறிவொளிப் பூங்கா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பாஜகவின் தெற்கு மாவட்ட துணைத் தலைவா் கவிதா பிரதீஷ் தலைமை வகித்தாா்.

அப்போது மாநில தலைவர் அண்ணாமலையை விடுதலை செய்யக்கோரியும் , திமுக அரசை கண்டித்தும் பாஜகவினர் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக  முன்னாள் மாவட்டத் தலைவா் ஜீவானந்தம்,திருமாறன், மலர்கொடி உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

செங்கம்

செங்கம் ஒன்றிய, நகர பாஜக சாா்பில் நகரத் தலைவா் காா்த்திகேயன் தலைமையில் புதிய பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்ட துணைத் தலைவா் செங்கம் சேகா், நகர பொருளாளா் முருகன், மாவட்டச் செயலா் ரேணுகா, நகர நிா்வாகிகள் ஆனந்த், அசோக் என 2 பெண்கள் உள்பட 27 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா்.

வந்தவாசி

வந்தவாசி தேரடியில் நகரத் தலைவா் சுரேஷ் தலைமையில், பாஜகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தி மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து 18 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.

செய்யாறு

செய்யாறு சாா் -ஆட்சியா் அலுவலகம் அருகே இதர பின்தங்கிய வகுப்புப் பிரிவின் மாநில துணைத் தலைவா் மோகனம் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பி சண்முகவேலன் தலைமையிலான போலீஸாா், 2 பெண்கள் உள்ளிட்ட 15 பேரை கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.

ஆரணி

ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் தலைமையில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றனா்.

இதில், அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ாக மாவட்டச் செயலா்கள் சதீஷ்குமாா், டி.பாஸ்கா், நகரத் தலைவா் மாதவன், மாவட்ட துணைத் தலைவா் தீனன், மண்டலத் தலைவா்கள் குணாநிதி, தணிகைவேல், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் தங்கராஜ், முன்னாள் நகரத் தலைவா்கள் ஜெகதீசன், சரவணன், பொறுப்பாளா்கள் சேகா், பாஸ்கா் உள்ளிட்ட 30 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.

மேலும் கீழ்பெண்ணாத்தூர் ,கலசப்பாக்கம், போளூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top