Close
மார்ச் 23, 2025 2:37 மணி

சமகல்வி மண்டல மாநாடு : பங்கேற்க பாஜக மாநில பொதுச் செயலாளர் அழைப்பு..!

நிகழ்ச்சியில் பேசிய மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் தேசிய கல்விக் கொள்கை வீட்டு தொடர்பின் மூலம் கையெழுத்து பெறுவது மற்றும் ஏப்ரல் ஐந்தாம் தேதி வேலூர் மாவட்டம் கோட்டை மைதானத்தில் நடைபெறுகின்ற மாநாட்டு குறித்து சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். வேலூர் பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜீவானந்தம், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி பேசுகையில்;

அடுத்த மாதம் (ஏப்ரல்) 5ந் தேதி வேலூர் கோட்டை மைதானத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மும்மொழிக்கொள்கை ஆதரித்து சமக் கல்வி மண்டல மாநாடு வேலூரில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்திலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் சமமான தரமான கல்வி கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் சமக்கல்வி கையெழுத்து இயக்கம் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் அமோக வரவேற்போடு பயணிக்கிறது.

இந்த மாவட்டத்தில் 22 மண்டலங்களில் 2.20 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சிறப்பாக இந்த பணி நடைபெற்றுவருகிறது. எனவே தெற்கு மாவட்ட பாஜகவுக்கு எனது மனமார்ந்த பாராட்டினை தெரிவித்துக்கொள்கிறேன்  என மாநில பொதுச் செயலாளர்  கார்த்தியாயினி பேசினார்.

ஆலோசனை கூட்டத்தில் சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர் சதீஷ்குமார், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் அறவாழி, அமைப்பு சாரா மக்கள்சேவை பிரிவு மாநில செயலாளர் கதிரவன்,

ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் சீனு, மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி , நகர தலைவர்கள் மூவேந்தன், சந்தோஷ் பரமசிவம், அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு மாவட்ட தலைவர் திருமாறன், இளைஞரணி பிரவீன்குமார் மற்றும் சரவணன் உள்பட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் முன்னோடி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top