திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பாக முதல்வரின்காக்கும் கரங்கள் திட்டம் குறித்து மாவட்ட செயல்திட்ட தேர்வுக் குழுக் நடைபெற்றது.
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் மூலம், முன்னாள் படைவீரர்கள், இராணுவப்பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் மறுமணமாகாத கைம்பெண்கள். முன்னாள் படைவீரர்களைச் சார்ந்த திருமணமாகாத மகள்கள் (ம) முன்னாள் படைவீரர்களைச் சார்ந்த மறுமணமாகாத கைம்பெண் மகள்கள் ஆகியோர்கள் தொழில் தொடங்கிட ஏதுவாக ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் திட்டமாகும்.
மேலும் இந்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு. திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சியும்,
மேலும், இத்திட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான முன்னாள் படைவீரர்கள் பயன்பெறும் வகையில் வயது வரம்பு நீக்கப்பட்டு கீழ்கண்ட திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
முன்னாள் படைவீரர், திருமணமாகாத மகள் மற்றும் முன்னாள் படைவீரரின் விதவையர் ஆகியோருக்கு வயது உச்சவரம்பு ஏதுமில்லை எனவும், 25 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் படைவீரரின் மகன் இத்திட்டத்தில் பயன்பெற்றிட முன்னாள் படைவீரர் விதவையருடன் ஒன்றிணைந்து கூட்டுபங்குதாரராக அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும், விவசாயம் சார்ந்த தொழில்கள், கால்நடை சார்ந்த தொழில்கள், பட்டுப்புழு வளர்ப்பு ஆகிய தொழில்களைமேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு 98 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை விண்ணப்பித்திருக்கிறார்கள். அதனடிப்படையில் நடைபெற்ற செயல்திட்ட தேர்வுக்குழு கூட்டத்தில் தொழில் தொடங்குவதற்கு விண்ணப்பம் அளித்திருந்த முன்னாள் படைவீரர்களை நேரில் அழைத்து அவர்கள் தொடங்கவுள்ள தொழில் குறித்த விவரங்களை கேட்டறிந்து ஆட்சியர் க.தர்ப்பகராஜ், ஆலோசனைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் உதவி இயக்குநர்,முன்னாள் படைவீரர் நலத்துறை சுரேஷ் நாராயணன். பொது மேலாளர், மாவட்டதொழில் மையம் ரவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌரி மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.