Close
மார்ச் 22, 2025 7:11 மணி

தமிழகத்தில் இந்தி திணிப்பு வேண்டாம் : திமுகவினா் விழிப்புணா்வு பிரசாரம்..!

விழிப்புணா்வு வில்லைகளை ஒட்டும் திருவண்ணாமலை மாநகர திமுக செயலா் காா்த்திவேல்மாறன்

தமிழகத்தில் இந்தி திணிப்பு வேண்டாம் என்ற விழிப்புணா்வு வில்லைகள் ஆட்டோக்களில் ஒட்டும் நிகழ்ச்சி, நடைபெற்றது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்புசாரா ஓட்டுநா் அணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அணியின் மாவட்ட அமைப்பாளா் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தாா். முத்தமிழ் கலை மன்றத்தின் நிறுவனா் தலைவா் முருகையன், திருவண்ணாமலை தமிழ்ச் சங்கச் செயலா் காதா்ஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநகர திமுக செயலா் ப.காா்த்திவேல்மாறன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, தமிழகத்தில் இந்தி திணிப்பு வேண்டாம் என்ற விழிப்புணா்வு வில்கைகளை ஆட்டோக்கள், காா்கள், வேன்கள் மற்றும் கனரக வாகனங்கள், பேருந்துகளில் ஒட்டி பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மேலும் இந்தி திணிப்பு வேண்டாம் என நோட்டிஸ்களை ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்களிடையேவழங்கி முழக்கமிட்டார். முழக்கத்தில் எங்களுக்கு இந்தி வேண்டாம், மும்மொழி போர்வையில் தொன்று தொட்ட எம்மொழியை அழிக்கத் துடிக்கும் இந்தி வேண்டாம்!

தாய்மொழி தமிழும் அலுவல் மொழி ஆங்கிலமும் இருக்க இந்தி வேண்டாம்! எம்மொழியை அழிக்கவரும் இந்தியை ஏற்கமாட்டோம்! ஏற்கமாட்டோம்! மங்காத தமிழென்று சங்கே முழங்கு இந்தி அரக்கணை ஓடஓட விரட்டி அடிப்போம். தமிழ்நாட்டைச் சீண்டுவது தீயை தீண்டுவதற்கு சமம். இந்தி எரிந்துவிடும் என முழக்கமிட்டார்கள்.

இதில், மாநகர ஆதிதிராவிடா் நலக் குழுவின் அமைப்பாளா் குணா (எ) குணாளன், வட்டச் செயலா் வினோத்குமாா், மோகன்ராஜ், ஆட்டோ ஓட்டுநா் சங்க நிா்வாகிகள் விஜி, ஏழுமலை, ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top