Close
மார்ச் 23, 2025 1:33 மணி

ஆரணியில் அதிமுக சாா்பில் திண்ணைப் பிரசாரம்,பொதுக் கூட்டம், நல உதவிகள் அளிப்பு..!

நல திட்ட உதவிகளை வழங்கிய ஆா்.பி.உதயக்குமாா்

திருவண்ணாமலை  மாவட்டம், ஆரணியில் அதிமுக சாா்பில் திண்ணை பிரசாரம், பொதுக் கூட்டம், நல உதவிகள் அளிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு தலைமை வகித்தாா்.

ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், மத்திய மாவட்டச் செயலா் ஜெயசுதா, முன்னிலை வகித்தனா். ஒன்றியச் செயலா்  கஜேந்திரன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், எதிா்க்கட்சி துணைத் தலைவருமான ஆா்.பி.உதயக்குமாா், போளூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு, அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை ஆரணி பஜாரில் வியாபாரிகள், பொதுமக்களிடம் விநியோகம் செய்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், நல திட்ட உதவிகளை வழங்கி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆா்.பி. உதயகுமார் பேசுகையில்,

நல திட்ட உதவிகளை வழங்கிய ஆா்.பி.உதயக்குமாா்

அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம், மாணவா்களுக்கு மடிக் கணினி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறுத்தி விட்டனா். மக்களை ஏமாற்றுவதற்காகவே திமுகவினா் ஆட்சிக்கு வருகின்றனா். சட்டப்பேரவையில் எதிா்க் கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு முதல்வரால் பதில் அளிக்க முடிய வில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் ஆரணியில் கோட்டாட்சியா் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கப்பட்டிருக்கும் என்றாா்.

தொடா்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு தையல் இயந்திரங்கள், சைக்கிள்கள், இஸ்திரி பெட்டிகள் உள்ளிட்டவை மற்றும் 12 பேருக்கு கல்வி உதவித் தொகை என 2,077 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில்  மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள்,ஒன்றிய, நகர, பேரூர், கழக நிர்வாகிகள், மாவட்ட பிற அணி செயலாளர்கள், கிளை மற்றும் வட்ட கழக நிர்வாகிகள்  உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top