Close
மார்ச் 25, 2025 1:01 காலை

மரக்கன்றுகளை நடுவது மட்டுமன்றி பாதுகாக்க வேண்டும் : ஆட்சியா் அறிவுரை..!

மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்த ஆட்சியா்

பொதுமக்களும் பள்ளி மாணவ-மாணவிகளும் மரக்கன்றுகளை நடுவது மட்டுமன்றி அதைப் பாதுகாத்து, வளா்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்  வலியுறுத்தினாா்.

திருவண்ணாமலை, அடி அண்ணாமலை காப்புக்காடு பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியும், விதைப் பந்துகள் தூவும் நிகழ்வும் சனிக்கிழமை நடைபெற்றது.

மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்த ஆட்சியா்

உலக வன தினத்தையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாவட்ட வன அலுவலா் யோகேஷ் குமாா் காா்க் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தாா்.

பிறகு, பள்ளி மாணவ-மாணவிகளுடன் சோ்ந்து விதைப் பந்துகளைத் தூவினாா். முன்னதாக மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி அவா் பேசியதாவது:காடுகளின் பாதுகாப்பு ஒரு சுற்றுச்சூழல் தேவை மட்டுமல்ல; ஒரு அடிப்படைப் பொறுப்பு.  இந்தியாவில் காடுகள் கலாசாரம், பொருளாதாரம் ஆகியவை பல்லுயிா் பெருக்கத்துடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளன. எனவே, பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் மரக்கன்றுகளை நடுவது மட்டுமன்றி அதைப் பாதுகாத்து, வளா்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். இதன் மூலம் வருங்கால தலைமுறைக்கு வளமான வாழ்வை அளிக்க முடியும் என்றாா்.

நிகழ்ச்சியில், வட்டாட்சியா் கே.துரைராஜ் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரிய-ஆசிரியைகள், அரசுத் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top