Close
மார்ச் 25, 2025 1:25 காலை

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் :ஆட்சியர் தகவல்..!

மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் , தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் :-

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஏழ்மையான நிலையில் உள்ள அரசு, அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டம், வேளாண்மை ஆகிய தொழிற்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களது கல்வியை தொடர்வதற்கு ரூ.50,000/- உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கல்வி உதவித்தொகை பெற விரும்புவோர் அரசின் ஒற்றைச் சாளர முறையில் (கவுன்சிலிங்) கல்லூரிச் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். கு டு ம்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருப்பிட சான்று பெற்றவராக இருக்க வேண்டும். தகுதியான நபர்கள் அந்தந்த வட்டங்களில் உள்ள தனிவட்டாட்சியரிடம் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஒற்றைச் சாளர கலந்தாய்வு வழியாக பெறப்பட்ட இட ஒதுக்கீடு சான்று. வருமானச் சான்று, இருப்பிட சான்று, சாதி சான்று, குடும்ப உறுப்பினர் சான்று,

குடியுரிமை சான்று, கல்லூரி பதிவாளரிடம் பெறப்பட்ட 7.5% சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெறவில்லை மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறவில்லை என்பதற்கான சான்று, கல்லூரி கட்டணம் குறித்த நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பித்து பயன்பெறலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top