Close
மார்ச் 26, 2025 6:24 மணி

சங்கரமடம் மற்றும் அவுலியா தர்காவில் ஜான்பாண்டியன் சிறப்பு பூஜை..!

சங்கரமடம் மற்றும் அவுலியா தர்காவில் தேவேந்திர குல வேளாளர் தலைவர் ஜான்பாண்டியன் சிறப்பு பூஜை மற்றும் தொழுகை மேற்கொண்டார்..

சங்கரமடம் மற்றும் அவுலியா தர்காவில் தேவேந்திர குல வேளாளர் தலைவர் ஜான்பாண்டியன் சிறப்பு பூஜை மற்றும் தொழுகை மேற்கொண்டார்..

சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு மாசி மக பிரம்மோற்சவம் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக இன்று புஷ்ப பல்லக்கு நிகழ்வினை தேவேந்திர குல வேளாளர் சங்கம் சார்பில் நடத்தப்படுகிறது.

இதில் பங்கேற்க தேவேந்திர குல வேளாளர் சங்க நிறுவனர் ஜான்பாண்டியன் காஞ்சிபுரம் வருகை புரிந்தார்.

காஞ்சிபுரம் தேரடி ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் மேற்கொண்ட பின் அவரை ஊர்வலம் ஆக காந்தி சாலை வள்ளல் பச்சையப்பன் திரு காமராஜர் சாலை அன்னை இந்திரா காந்தி சாலை என பல்வேறு சாலைகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

காஞ்சி சங்கர மடத்தில் உள்ள சி ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் ஜெயேந்திர ஸ்வாமிகள் அனுஷ்டானத்தில் சிறப்பு பூஜை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற அவுலியா தர்காவில் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டு மலரஞ்சலி மற்றும் பட்டாடை போர்த்தி வழிபட்டார். அவருக்கு தர்கா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top