சோழவந்தான்:
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அக்ரஹாரத்தை சேர்ந்த ஸ்ரீமதி ராதா வெங்கட்ராமன் .இவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தினுடைய சிஷ்யையாகவும் தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார். தமிழ் மீது தீவிர பற்று கொண்ட இவர் தொல்காப்பிய நூல்கள் பற்றிய ஆய்வுகளை குழுவாக சேர்ந்து மேற்கொண்டு வருகிறார் இவரது கவிதைகள் இலங்கை வானொலியில் ஆறுக்கும் மேற்பட்ட முறைகள் வாசிக்கப்பட்டுள்ளது.
இவர் சியாம் ஆர்ட் அகடாமி மூலம் தமிழ் ஆர்வலர்களுடன் சேர்ந்து உலக சாதனை படைப்பதற்கான முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். அந்த வகையில் தொல்காப்பியரின் உருவப்படம் பொறித்த பேனரில் தொல்காப்பியத்தின் 1602 நூற்பாக்களை 20 மணி நேரம் 40 நிமிடத்தில் எழுதி சாதனை படைத்துள்ளார். இவரின் இந்த முயற்சிக்கு தமிழ் ஆர்வலர்களும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். எதிர்காலத்தில் தனியாக கவிதை நூல் வெளியிடுவது தனது ஆசை என்று கூறும் இவர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழை வளர்க்க கற்றுக் கொடுக்க வேண்டும் அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் கூறுகிறார்
இது குறித்து இவர் கூறுகையில்,
மதுரை மாவட்டம் தென்கரையில் குடியிருந்து வருகிறேன். அதிகபேருக்கு தொல்காப்பியர் இருக்கிறார் என்பது தெரியும் ஆனால் அவரின் உருவம் எப்படி இருக்கும் என்பது தெரியாது. இன்றைய தலைமுறையினர் பார்த்ததும் கிடையாது. முதல் முறையாக சியாம் ஆர்ட் அகாடமி மூலம் தொல்காப்பியர் எப்படி இருப்பார் என்று ஒரு இமேஜ் கொடுத்தார்கள். அவர்களும் நாங்களும் அதாவது தமிழ் ஆர்வலர்களும் சேர்ந்து தொல்காப்பியர் உருவப்படம் வரைந்து அவருக்குள்ளேயே தொல்காப்பியரின் நூற்பாக்களை எழுதலாம் என்று நினைத்து ஆல் இந்தியா வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை வானொலியில் 6. 7 முறை எனது கவிதைகள் வாசிக்கப்பட்டு இருக்கு நான் பட்டப் படிப்பு படித்த பின்பு தான் தமிழ் மேல் ஒரு தீவிர ஈடுபாடு ஏற்பட்டது. அதன் பிறகு தான் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். இதற்கு எனது குடும்பத்தினர் குறிப்பாக எனது கணவர் மிகவும் உறுதுணையாக இருப்பது எனக்கு பெருமைக்குரியதாக உள்ளது. இவ்வாறு கூறினார்