Close
மார்ச் 26, 2025 6:15 மணி

அனைத்து கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி : எ.வ.வே.கம்பன் அறிக்கை..!

எ.வ.வே.கம்பன்

மாநில சிறுபான்மை ஆணையம், தமிழ்நாடு அரசு நடத்தும், அனைத்து கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி வரும் 28ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அருணை மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எ.வ.வே.கம்பன் அறிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் அரசின் எல்லோருக்கும் எல்லாமும் என்ற இலட்சியத்தை தமிழக கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்க, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் தமிழகத்திலுள்ள, அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப்போட்டிகளை கடந்த ஆண்டைப்போலவே இவ்வாண்டிலும் நடத்த இருக்கின்றது.

கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் கலை மற்றும் அறிவியல், மருத்துவம், சட்டம், பொறியியல், தொழில்நுட்பம் ஆகிய பாடதிட்டங்களைக் கடந்து மாணவர்கள் அறிந்தும், உணர்ந்தும் தெரியவேண்டிய உன்னத விழுமியங்களை மாணவர்கள் மத்தியில் விதைத்திடவும், நமது மொழி, பண்பாடு, இலக்கியம், கலைகள், வரலாறு ஆகியவற்றின் புரிதல்களையும்,

இன உணர்வினையும் பெற்றிடவும் இப்போட்டிகள் வழிவகுக்கும் என்று நம்புகிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளின் தாளாளர்க ள் , முதல்வர்கள், பேராசிரியப் பெருமக்கள் அனைவரும் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி நடைபெறும், இப்போட்டிகளில் தங்களது கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ-மாணவியர் சிறப்பாக பங்கேற்க ஏற்பாடு செய்து,

ஆணையத்தின் முயற் சிகள் வெற்றி பெற தங்களது மேலான ஒத்துழைப்பினைத் தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். பேச்சுப்போட்டி விதிகள். போட்டிகள் மாவட்ட அளவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனித்தனியாக நடத்தப்படும். ஒவ்வொரு கல்லூரியும் தங்களது கல்லூரியின் சார்பாக தமிழுக்கும், ஆங்கிலத்திற்கும் தலா இரண்டு மாணவர்களை அனுப்பலாம்.

மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர், மாநில அளவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கலந்துகொள்வர் . வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தமிழுக்கும், ஆங்கிலத்திற்கும் தனித்தனியாக பரிசுகளும், சான்றிதழ்களும் கீழ்கண்டவாறு வழங்கப்படும்.

மாநில அளவில் முதல் பரிசு ரூ 1,00,000, 2ம் பரிசு ரூ 50,000, 3ம் பரிசு ரூ 25,000 தொகையும், அதேபோல் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ 20,000, 2ம் பரிசு ரூ 10,000, மூன்றாம் பரிசு ரூ 5,000 என வழங்கப்படுகிறது. அனைத்து பரிசுகளையும், சான்றிதழ்களையும் சென்னையில் நடைபெற இருக்கும் விழாவில் முதலமைச்சர் நேரடியாக மாணவர்களுக்கு வழங்க அன்புடன் இசைந்துள்ளார்.

போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியர்களின் பெயர் பட்டியல்களை உடனடியாக டாக்டர் எ.வ.வே.கம்பன், ஒருங்கிணைப்பாளர், 54. திருக்கோவிலூர் ரோடு, சாரோன் , திருவண்ணாமலை என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தி கேட்டுக்கொள்கிறோம். மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று டாக்டர் எ.வ.வே.கம்பன் அறிக்கையில் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top