Close
மார்ச் 26, 2025 6:31 மணி

தலைமை அறிவுறுத்தலின்படி திமுக கொடிக் கம்பம் அகற்றம்..!

கொடிக்கம்பத்தை அகற்றிய திமுக நிர்வாகிகள்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தலைமைக் கழக அறிவுறுத்தலின்படி ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் திமுக கொடிக்கம்பத்தை அகற்றினார்.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்குச் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஜாதி மத ரீதியிலான அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக் கம்பங்களை அகற்றுமாறு திமுகவினருக்கு கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் உத்தரவிட்டாா்.  இதனை அடுத்து திருவண்ணாமலை தெற்கு வடக்கு மாவட்டத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக்கம்பங்களை அந்தந்த பகுதியில் உள்ள நிர்வாகிகள் அகற்ற வேண்டுமென பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிக்கைவெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஆரணி திமுக எம்பி எம்.எஸ்.தரணிவேந்தனின் சொந்த ஊரான வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் நியாய விலைக் கடை அருகில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த திமுக கொடிக் கம்பத்தை அவரது முன்னிலையில் அந்தக் கட்சியினா் அகற்றி எடுத்துச் சென்றனா்.

செய்யாறு அருகே முதல்வர் பிறந்த நாள் விழா 

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் மத்திய ஒன்றியம், மேற்கு ஒன்றியம் சார்பில் பூதேரி புல்லவாக்கத்தில் மு.க.ஸ்டாலினின் 72 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நல திட்டம் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செய்யாறு  எம்எல்ஏ  ஜோதி தலைமை தாங்கி பேசினார். செயற்குழு உறுப்பினர் வேலுமுருகன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சங்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெம்பாக்கம் மத்திய உணவு செயலாளர் ஜே சி கே.சீனிவாசன், மேற்கு ஒன்றியசெயலாளர் தினகரன் ஆகியோர் வரவேற்றனர்.

ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணிவேந்தன், பேச்சாளர்கள் ஆடுதுறை உத்திராபதி, ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்,

கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர்கள் மோகனவேல், நகர செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய துணை செயலாளர், கழக நிர்வாகிகள், அணி தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top