திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காஞ்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழாவை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தொடங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன், மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பூங்கொடி, அனைவரையும் வரவேற்றார்.

முப்பெரும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சரவணன் எம்எல்ஏ, சிறப்புரையாற்றினார். மாணவர்கள் நீங்கள் சிறந்த முறையில் படிப்பதற்காக எண்ணற்ற திட்டங்களும் சலுகைகளும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்.
முதலமைச்சரின் உத்தரவின் பெயரில் காஞ்சி காரப்பட்டு, நந்திமங்கலம், பனைஓலைப்பாடி, ஆகிய 4 ஊராட்சி தொடக்கப் பள்ளிகளில் கல்வித் திறனை கண்டு பள்ளிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களின் நலனுக்காக காலை உணவு திட்டம் நான் முதல்வன் திட்டம் மாணவர்கள் சத்தான உணவுகளை அருந்துவதற்காக தினந்தோறும் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்புக்கு செல்லும்போது பெண் பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்கு புதுமைப்பெண் திட்டம் ஆண் பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்கு தமிழ் புதல்வன் திட்டம் என்ற பல்வேறு திட்டங்களை தமிழக மக்களின் நலனுக்காகவும் மாணவர்களின் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவும், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், நானும் நமது தொகுதிக்காகவும் தொகுதி மக்களுக்காகவும் மாணவ மாணவிகளுக்காகவும் வழங்கி வருகிறார்கள் என்று சரவணன் எம்எல்ஏ இவ்வாறு கூறி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் கோவிந்தராஜ், வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம், வட்டார வளமையம் மேற்பார்வையாளர் சம்பத், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் செந்தில்குமார், உதவி இயக்குனர் ஊராட்சிகள் அண்ணாமலை, உதவி ஆசிரியர்கள் , ஆசிரியர் பயிற்றுனர் தண்டாயுதபாணி மற்றும் ஆசிரியர்கள் முன்னாள் மாணவ மாணவிகள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் என அனைவரும் பங்கேற்றனர்.