மதுரை.
இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 9-ந்தேதி லண்டனில் வல்லமை மிக்க சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தி இந்தியாவுக்கு பெருமைசேர்த்தார்.
இதைத்தொடர்ந்து, கடந்த 13-ந்தேதி அன்று சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் கடந்த 18-ந் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பலர் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அறங்காவலர் சண்முகசுந்தரம், சென்னையில் இளையராஜாவை நேரில் சந்தித்து சிம்பொனி மூலம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தமைக்கு பாராட்டு தெரிவித்தார்.
மேலும் ,அவர் இளையராஜாவிற்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மூலஸ்தான சுவாமி படத்தை நினைவு பரிசாக வழங்கினார். மேலும் கோவில் பிரசாதம் வழங்கி வாழ்த்தினார். அதை பெற்றுக் கொண்ட இளையராஜாஅறங்காவலர் சண்முக சுந்தரத்திற்கு நன்றி தெரிவித்தார்.