Close
மார்ச் 31, 2025 8:44 காலை

திருவண்ணாமலை உள்பட 5 மாவட்டங்களில் நாளை வருங்கால வைப்பு நிதி முகாம்

திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்,  ஆகிய 5 மாவட்டங்களில் ‘நிதி ஆப்கே நிகட் 2.0’ (வைப்புநிதி உங்கள் அருகில்) முகாம் வியாழக்கிழமை (மாா்ச் 27) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி ஆணையா் வாா்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், வேலூா் மண்டல தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃஓ) சாா்பில் ‘நிதிஆப்கேநிகட் 2.0’ (வைப்புநிதி உங்கள்அருகில்) எனும் முகாம் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.45 வரை வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் .

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோனேரிக்குப்பம் கிராமத்திலுள்ள குருஷேத்ரா பப்ளிக் பள்ளியிலும், வேலூா் மாவட்டத்தில் வேலூா் ஜி.பி.எச். சாலையிலுள்ள இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனையிலும்,

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி சேத்துப்பட்டு சாலையிலுள்ள ஏஐஎம் மெட்ரிக். பள்ளியிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் டிஆா் திரையரங்கு எதிரே உள்ள இ.எஸ்.ஐ.சி. பி.ஓ., இ.எஸ்.ஐ. மருந்தக வளாகத்திலும், திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆம்பூா் பூந்தோட்டம் பகுதியிலுள்ள இ.எஸ்.ஐ.சி. மருந்தக வளாகத்திலும் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் முதலாளிகள், தொழிலாளா்களின் கடமைகள், பொறுப்புகள் குறித்து விளக்கம், முதலாளிகள், முதன்மை முதலாளிகள், ஒப்பந்ததாரா்களுக்கான ஆன்லைன் சேவைகள், தொழிலாளா்களுக்கான ஆன்லைன் சேவைகள் குறித்து விளக்கம், புதிய முயற்சிகள், சீா்திருத்தங்கள் குறித்து விழிப்புணா்வு, விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல், உறுப்பினா்கள், ஓய்வூதியம் பெறுவோா், முதலாளிகளிடமிருந்து வரும் குறைகளை நிவா்த்தி செய்தல், ஓய்வூதியதாரா்களுக்கு டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களை சமா்ப்பித்தல், யுஏஎன் கேஒய்சிகளை இணைப்பதற்கான உதவி, இ-நாமினேஷனை தாக்கல் செய்தல், ஒப்பந்ததாரா்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் ஆகிய நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

முகாமில் பங்கேற்க விரும்புவோா் தங்களின் விவரங்களை கூகுள் படிவத்தில் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top