திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரம் மிலத் நகர் மசூதியில் நகர மன்ற தலைவர் சாதிக் பாஷா தலைமையில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கிரி எம் எல் ஏ பேசுகையில், இந்திய நாடு மத சார்பின்மை நாடு, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், இந்து மதத்தினர் அனைவரும் தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள். சில தேச விரோத சக்திகள் ஒற்றுமையாக வாழக்கூடிய நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர்.
இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும். புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் .மேலும் சிறுபான்மையினர்களின் பாதுகாவலராக திகழும் ஒரே முதல்வர் ஸ்டாலின் என்று கிரி எம் எல் ஏ கூறினார்.
நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளர் அன்பழகன், ஒன்றிய செயலாளர் மனோகரன், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் அப்துல் காதர், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய செயலாளர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ,ஜமாத் கமிட்டி நிர்வாகிகள், அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.