Close
மார்ச் 31, 2025 11:51 மணி

சிறப்பாக பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலா்களுக்கு கூடுதல் டிஜிபி பாராட்டு

காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய கூடுதல் டிஜிபி

திருவண்ணாமலை மாவட்டத்தில், சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பாக கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் தெருவில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதிக்கு சென்று குடியிருப்பு பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து நகர துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று நிலுவையில் உள்ள வழக்குகள் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை, வழக்குப்பதிவு, தொடர் நடவடிக்கைகள், பழயை குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணித்தல், கள்ளச்சாராய மற்றும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள், அது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் விபரம் குறித்து கூடுதல் டிஜிபி ஆய்வு செய்தார்.

மேலும், வெளிமாநிலங்களில் இருந்து சமீபகாகலமாக திருவண்ணாமலைக்கு கஞ்சா கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்திய கூடுதல் டிஜிபி, ஆன்மிக நகருக்குள் இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க 24 மணி நேரமும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதோடு, சமீபத்தில் வெளிநாட்டு பெண்ணை சுற்றுலா வழி காட்டி ஒருவர் மலைக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தினார்.

இங்கு தங்கியுள்ள வெளிநாட்டினரின் விபரம் முழுவதும் போலீசுக்கு தெரிந்திருக்க வேண்டும், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், வெளி நாட்டினரிடம் தவறாக நடக்க முயற்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதேபோல், திருவண்ணாமலை நகரின் போக்குவரத்து சீரமைப்பு, நெரிசலை தவிர்க்க மாற்று ஏற்பாடுகள், கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை அடுத்த ஆவூா் கிராமத்தில் அடகுக்கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையின் எதிரே வியாழக்கிழமை அதிகாலை சுமாா் 2.30 மணிக்கு மா்ம நபா் ஒருவா் சந்தேகப்படும்படி நின்றிருந்தாா்.

அவ்வழியே இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வேட்டவலம் காவல் நிலைய காவலா்கள் ராஜபாண்டி, இளங்கோவன்  ஆகியோா் அந்த நபரை விசாரிக்க முயன்றனா். அப்போது, அந்த நபா் திடீரென கற்களால் காவலா்களை தாக்கத் தொடங்கினாா்.

இதேநேரத்தில் நகைக் கடையின் உள்ளே இருந்த மேலும் இருவா் வெளியே வந்து காவலா்களை கற்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனா். காவலா்கள் இருவரும் அந்த 3 பேரையும் பிடிக்க முயன்றும் பயனில்லை. இதன்பிறகு அடகுக்கடை அருகே சென்று பாா்த்தபோது கடையின் ஷட்டரை உடைத்து 3 பேரும் உள்ளே சென்று நகைகளை கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து, வேட்டவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கொள்ளையா்களின் தாக்குதலில் காயமடைந்த காவலா் இளங்கோவன் , திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்ந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

இந்நிலையில், திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்த தமிழக காவல்துறையின் கூடுதல் இயக்குநா் டேவிட்சன் தேவ ஆசீா்வாதம், அடகுக்கடை கொள்ளையைத் தடுத்த வேட்டவலம் காவல் நிலைய காவலா்கள் ராஜபாண்டி, இளங்கோவன் ஆகியோரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கிப் பாராட்டினாா்

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா், திருவண்ணாமலை உள்கோட்ட உதவி காவல் காவல் கண்காணிப்பாளா் சதீஷ், தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் தயாளன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top