காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் 25 வருட பணி நிறைவினை ஒட்டி திருக்கோயில் செயல் அலுவலர் சங்கம் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 25 வருடங்களாக பல்வேறு திருக்கோயில்களில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த நடராஜன் என்பவர் இந்த மாதம் பணி நிறைவு பெறுகிறார்.
இதனையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட திருக்கோயில் செயல் அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா யாத்ரி நிவாஸ் கூட்டரங்கில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் உதவி ஆணையர் அலுவலக மேலாளர் ராஜா அன்னாரின் பணியை பாராட்டி பேசினார்.
பல்வேறு திருக்கோயில்களில் இருந்து அவருக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொண்ட மாலை, பிரசாதங்கள் மற்றும் பொன்னாடைகள் என பல தரப்பினரும் அணிவித்து அவரது செயல் அலுவலர் பணியினை பாராட்டி பேசினார்.
இதனைத் தொடர்ந்து திருக்கோயில் அலுவலர்கள் சங்கம் சார்பில் செயல் அலுவலர்கள் செந்தில்குமார், கதிரவன், கேசவன், பூவழகி, விஜயன் உள்ளிட்டோர் அவருக்கு சிறப்பு பொன்னாடை போர்த்தி சிறப்பு நினைவு பரிசினை வழங்கினர்.
செயல் அலுவலர் நான்காம் நிலையில் பணி பெற்று, தற்போது 2ம்நிலை செயல் அலுவலர் வரை பணியாற்றி கடந்த 25 வருடங்களாக பல்வேறு திருக்கோயில் திருப்பணிகளுக்கு முக்கிய பங்காற்றிய நினைவுகளை அனைவரும் நினைவு கூர்ந்தனர்.
ஏற்புரை நிகழ்த்திய பணி நிறைவு பெற்ற செயல் அலுவலர் நடராஜன் கூறுகையில், 25 ஆண்டு காலமாக தனக்கு ஒத்துழைப்பு அளித்து குடும்ப உறுப்பினர்கள் போல் கவனித்துக் கொண்ட அனைத்து அலுவலர்களுக்கும், திருக்கோயில் நிர்வாகத்தினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வர்கள் பூங்கொடி , அலமேலு, பட்டாச்சாரியார்கள், சிவாச்சாரியார்கள், திருக்கோயில் ஓதுவாமூர்த்திகள் மற்றும் திருக்கோயில் அறங்காவலர்கள், பணியாளர்கள் நகர முக்கிய பிரமுகர் என பலர் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துரை வழங்கினர்.