Close
ஏப்ரல் 1, 2025 4:57 காலை

மத்திய அரசை கண்டித்து தென்காசி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

இன்று தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்திற்குரிய சுமார் 4000 கோடி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் 11 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குத்துக்கல்வலசை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் நாமக்கல் ராணி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் இந்த ஆர்ப்பாட்டமானது சாலையில் தான் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் நம்ம கழகத் தலைவர் பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக ஓரமாக நடத்த அறிவுறுத்தி இருக்கிறார்.

நமது கழகத் தலைவர் சம்பளத் தொகை தாமதமாக வழங்குகிறார் என்று நினைக்கிறீர்கள். மேலே இருந்து அவர்கள் கொடுத்தால் தான் நாம் கொடுக்க முடியும்.

இருப்பினும் தமிழ்நாட்டு நிதியிலிருந்து வழங்கி வருகிறார். மக்களைக் காக்கும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், நகர் மன்ற தலைவர் சாதிர், தென்காசி வட்டார காங்கிரஸ் தலைவர் குற்றாலம் பெருமாள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top