Close
ஏப்ரல் 1, 2025 4:36 காலை

வழக்குகளை விரைவாக நீதிபதிகள் கையாள வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதி வேண்டுகோள்

ஐந்து முதல் பத்து வருடங்களுக்கு மேலாக உள்ள வழக்குகளை விரைவாக நீதிபதிகள் கையாள வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி திரு. முரளிசங்கர் நீதிபதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மாவட்ட முன்சீப் மற்றும் உரிமையியல் நீதிமன்ற புதிய கட்டிடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புக்கான அடிக்கல் நாட்டு விழா உத்திரமேரூர் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட நீதிபதி திரு. செம்மல் தலைமையில் நடைபெற்றது.

இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்கள் பொறுப்பாளரான திரு. முரளி சங்கர் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே குமரேஷ் பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நீதிமன்ற கட்டும் பணிக்கான பணிகளை துவக்கி வைத்தனர்.

விழாவில் பேசிய நீதிபதி கே. முரளி சங்கர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14,054 சிவில் வழக்குகளும் 7725 குற்ற வழக்குகளும் என மொத்தம் 21,779 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

ஐந்து வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்குள் 6231 வழக்குகளும் 10 வருடங்களுக்கு மேல் 1961 வழக்குகளும் நிலுவையில் உள்ளது எனவும், இதனை நீதிபதிகள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விரைவாக தீர்வு கண்டு பொதுமக்களுக்கு சேவை புரிய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, எஸ்பி சண்முகம், முதன்மை உரிமை நீதிமன்ற நீதிபதி வசந்தகுமார் உள்ளிட்ட காஞ்சிபுரம் நீதிமன்ற நீதிபதிகள், உத்திரமேரூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் கருணாநிதி செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட வழக்கறிஞரும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top